ரவி தேஜா – ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் ஜதாரா திரைப்படம் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபல எழுத்தாளர் பானு போகவரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் நவீன் சந்திரா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ஹைதராபாத்தில் நேற்று இப்படத்தின் பிரமாண்டமான பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சூர்யா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் கூறுகையில், “ரவி தேஜாவின் ரசிகனான எனக்கு இது ஒரு சிறந்த தருணம். ரவி தேஜாவின் படங்களுக்கு தமிழிலும் ஒரு அற்புதமான கிராஸ் இருக்கிறது. அவரின் விக்ரமகுடு (சிறுத்தை) படம் கார்த்தியின் கேரியரில் ஒரு பெரிய திருப்புமுனை. மாஸ் ஜதாரா சூப்பர்ஹிட் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் பானுவின் கனவு நனவாகட்டும். இந்த மாதம் 31ஆம் தேதி மற்றொரு ப்ளாக்பஸ்டரைப் பார்க்கப் போகிறோம்,” என்றார்.

