நடிகர் யோகி பாபு மற்றும் வாணி போஜன் நடிக்கும் புதிய வெப் தொடரான ‘சட்னி – சாம்பார்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துவரும் நடிகர் யோகி பாபு, இயக்குநர் ராதா மோகன் இயக்கும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடருக்கு ‘சட்னி சாம்பார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதில் வாணி போஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், இத்தொடரில் தீபா சங்கர், காயத்ரி ஷான், நிழல்கள் ரவி, ஆர். சுந்தரராஜன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த வெப் தொடரை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த தொடருக்கு வசனங்களை எழுதியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000044651-1024x1024.jpg)
இந்த தொடர் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைத் தொடராக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு உணவகங்களுக்கு இடையே நடக்கும் போட்டியே இந்த தொடரின் மையக்கரு. இந்நிலையில், சட்னி சாம்பார் வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.