Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘மை டியர் தல’ இதுதான் எனக்கு பிடித்த புகைப்படம் என அஜித்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்த யோகி பாபு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான “வேதாளம்” திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில், அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், மற்றும் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில நாட்களாக யோகி பாபு மற்றும் அஜித் குமாரை பற்றி சில பரபரப்பான சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்தன. இந்நிலையில் அதற்கு ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் யோகி பாபு.

இந்நிலையில், “வேதாளம்” படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் ஒன்றை, நடிகர் யோகிபாபு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், மொட்டை ராஜேந்திரன் மற்றும் யோகிபாபுவை, நடிகர் அஜித் புகைப்படம் எடுக்கும் போதே, அந்த பொம்மை படம் தான் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் என்று யோகிபாபு கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News