Tuesday, April 16, 2024

மீண்டும் கமலோடு இணையும் துல்கர் மற்றும் ஜெயம்ரவி… அப்போ சிம்புவின் கதி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது நடிகர் கமல்ஹாசனின் விக்ரம். இப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களை முடித்துவிட்டார் கமல்.இந்த ஆண்டிலேயே இந்தியன் 2 ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.தக் லைஃப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில், கடந்த மாதம் முதல் வாரத்தில் செர்பியாவில் திட்டமிடப்பட்டது.ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

இந்நிலையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் கால்ஷீட் பிரச்சினையால் அடுத்தடுத்து படங்களில் இருந்து விலகினர்.ஷங்கர் இயக்கத்தில் நீண்ட ஆண்டுகளாக முடங்கிக் கொண்டிருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் கையில் எடுத்தார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் சூட்டிங் வெகுவாக நடந்த நிலையில் எடுக்கப்பட்ட படத்தின் நீளத்தால் இந்தியன் 2 மற்றும் 3 என இரண்டாக உருவாகியுள்ளது.

இதற்கிடையில் தக் லைஃப் படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவிக்கு பதிலாக சிம்பு, அரவிந்த்சாமி இப்படத்தில் கமிட் ஆகியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தில் மீண்டும் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம்ரவி ஆகியோர் இணையவுள்ளதாகவும் அதேசமயம் சிம்புவும் இந்தப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவுகின்றது.தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News