சுந்தர் சி இயக்கிய, நடித்த, தயாரித்த சமீபத்திய அரண்மனை 4 படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முந்தைய அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அரண்மனை 4 வசூலில் மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இதையடுத்து சுந்தர் சி மீண்டும் பேய் ட்ரெண்டை கோலிவுட்டில் புகுத்தியுள்ளார். அவரது அடுத்த படம் குறித்து சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விமல் மற்றும் சிவா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். வாணி போஜன் ஹீரோயினாக நடிக்கிறார். சுந்தர் சி தற்போது இந்த படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். அதன்பின், நடிகை தமன்னா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு பேய் படத்தை இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் அவர் மீண்டும் கோலிவுட்டில் நுழைந்தார்.தற்போது மீண்டும் ஹாரர் படத்தில் இணைய உள்ளார். தலைநகரம் உள்ளிட்ட படங்களில் சுந்தர் சியுடன் இணைந்து காமெடி கலாட்டா செய்த நிலையில், மீண்டும் இருவரும் இணைவது குறிப்பிடத்தக்கது. தமன்னாவும் நடிக்கும் இந்த படத்தின் கதைக்களம் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.