2024 தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்தும், தமிழில் எந்த பெரிய அளவிலான வெற்றிபெற்ற படங்களும் வெளியிடப்படவில்லை கில்லி ரீ ரிலீஸ் மற்றும் அரண்மனை 4 படங்கள் மடட்டுமே சற்று வசூலையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன.ஆனால், மலையாளத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளன.
ஜனவரி 1 முதல் மே 19 வரை வெளியான மலையாள படங்களின் மொத்த வருமானம் ரூ.1009+ கோடியாகும். இதில், தமிழ் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் 241 கோடிகளை வசூலித்துள்ளது. அதன் பின் ஆடு ஜீவிதம் 158 கோடிகளையும், ஆவேசம் 155 கோடிகளையும், பிரேமலு 135 கோடிகளையும் ஈட்டியுள்ளன. மேலும், வருஷங்களுக்கு சேஷம், பிரமயுகம், குருவாயூரம்பல நடையில், ஆபிரகாம் ஓஸ்லர் ஆகிய படங்களும் நல்ல லாபத்தைப் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு முதல் பாதியில், மலையாள சினிமா மிகவும் லாபகரமாக இருக்கிறது. இந்த படங்கள் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதே போல் வரவிருக்கும் படங்களும் சிறந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள படங்களின் வெற்றியின் முக்கிய காரணம் அவை கமர்சி்டுமேயல் படங்கள் இல்லாமல், சிறந்த கதைகளை மையமாகக் கொண்டிருப்பது. குறைந்த பட்ஜெட்டில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் எடுக்கப்படுவதும், ஹீரோக்கள் தங்கள் இமேஜ் பற்றி கவலைப்படாமல் கதாபாத்திரங்களாகவே நடிப்பதும் முக்கிய காரணங்களாகும்.