70-வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மலையாள நடிகர் மம்மூட்டி நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ மற்றும் ‘ரோர்ஷாக்’ போன்ற படங்கள் விருதுக்காக பரிந்துரை செய்யப்படவில்லை என்று மலையாள இயக்குநரும், தேசிய விருதுக் குழுவின் தென்னிந்திய உறுப்பினருமான பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பத்மகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “’ஆட்டம்’ போன்ற படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தாலும், மம்மூட்டிக்கு விருது கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ’மற்ற படங்களுக்கு விருது வழங்கி மம்மூட்டியை புறக்கணித்துவிட்டதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் மம்மூட்டியின் எந்த படங்களும் விருதுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை என்பது அவர்களுக்கு தெரியாது.
வீடியோ லின்க்: https://www.instagram.com/reel/C-upNPJoBSf/?igsh=Nnl1dm94aXJsZmsz
சமூக ஊடகங்களில் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது புத்திசாலித்தனம் அல்ல. மம்மூட்டி போன்ற ஒரு மகா நடிகரை கவுரவிக்கும் வாய்ப்பை மலையாள திரையுலகம் தவற விட்டுவிட்டது என்று மலையாள இயக்குனரும் நடிகருமான பத்மகுமார் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.