Wednesday, April 10, 2024

‘பையா’ இரண்டாம் பாகத்தில் கார் இருக்கும்! கார்த்தி இருப்பாரா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கார்த்தி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய படம் ‘பையா’. பதினான்கு ஆண்டுகளக்கு முன்பு வெளியான இந்தப் படம் இப்போது மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கும் இயக்குனர் லிங்குசாமி, அந்தப் படத்தில் கார்த்தி நடிப்பாரா என்று சந்தேகம் தெரிவித்திருக்கிறார்.

பையா படம் எடுத்த போது பருத்திவீரன் பாடி லாங்குவேஜில் இருந்து மாறுவதற்கு கார்த்தி ரொம்பவே சிரமப்பட்டார். கதைக்காக தன்னை மாற்றிக் கொண்டு நடித்தார். இப்போது ‘பையா 2’ படத்திற்கான கதையை கார்த்தியிடம் சொல்லி விட்டேன்.

ஆனால், இந்த 14 வருடங்களில் கார்த்தியின் நடிப்பில், தோற்றத்தில் ஒரு மெச்சூரிட்டி வந்துவிட்டதால், ஒரு குழந்தைக்கு அப்பாவாக கூட நடித்து விட்டார் என்பதால் மீண்டும் பையா கதாபாத்திரத்தை திரும்பி பண்ண வேண்டுமா என யோசிக்கிறார். அதனால், இதற்கு பதிலாக வேறு ஏதாவது பண்ணலாமா என்று கேட்டுள்ளார்.

‘பையா 2’ படத்தில் கார்த்தி சார் நடிக்கவில்லை என்றால் வேறு ஒரு ஹீரோவை வைத்து படமாக்கும் விதமாகத்தான் அதை எழுதியுள்ளேன். ஆனால், பையா 2விலும் கார் இருக்கும்.. ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள்” என்று லிங்குசாமி தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News