மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை ஆகும். பா.ரஞ்சித் தயாரித்துள்ள இந்த படத்தை அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்குகிறது.

துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய துருவ் விக்ரம், “இந்த படத்தை எனது முதல் படமாகவே கருதுகிறேன். 100% உழைப்பைச் செலுத்தியுள்ளேன்.
இயக்குநர் மாரி செல்வராஜும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளார்” என்று கூறினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. தற்போது ‘பைசன்’ படத்திற்கு தணிக்கை குழுவின் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், படத்தின் ரன்டைம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.