நடிகர் தனுஷுடன் இணைந்து சமீபத்தில் “குபேரா” திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, அதன் பிறகு “மைசா” என்ற புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. அதில் ராஷ்மிகா ஒரு கேங்ஸ்டர் வீரமங்கை தோற்றத்துடன் பார்வையாளர்களை கவர்ந்தார்.

தற்போது, “மைசா” திரைப்படத்தின் பூஜை விழா ஹைதராபாத்தில் நடைபெறியுள்ளது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ்பாபு, ராஷ்மிகாவின் ஆரம்ப காட்சிக்காக கிளாப் போட்டு ஷாட்டை தொடங்கிவைத்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா, இதுவரை நடித்ததிலேயே வித்தியாசமான, அதிரடி மிக்க கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளார் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போதே அதிகரித்து உள்ளது.
இப்படத்தில் ராஷ்மிகாவுடன் இணைந்து நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.