Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

புதிய வசூல் சாதனை படைக்குமா கல்கி… உலகம் முழுவதும் நாளை ரிலீஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படமான ‘கல்கி 2898 ஏடி’ நாளை (ஜூன் 27) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ‘பாகுபலி 2’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய தெலுங்குப் படங்கள் உலகளவில் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தின. ‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு பிரபாஸுக்கு மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் படங்கள் கிடைக்கவில்லை. அதன்பின் அவர் நடித்த படங்கள் ‘பாகுபலி 2’ படத்தை விட குறைவான வசூலையே பெற்றன.

‘கல்கி 2898 ஏடி’ படத்தைப் பொறுத்தவரையில், இந்தியத் திரையுலகத்தின் பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் பலமாக இருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே முதல் முறையாக நடிக்கும் தெலுங்குப் படம் இதுதான். இப்படி பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.

சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது என சொல்லப்படுகிறது. தெலுங்கில் 170 கோடி, கர்நாடகாவில் 25 கோடி, தமிழகத்தில் 16 கோடி, கேரளத்தில் 6 கோடி, ஹிந்தியில் 85 கோடி, வெளிநாடுகளில் 70 கோடி என மொத்தமாக சுமார் 372 கோடிக்கு இப்படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் உலகளவில் சுமார் 750 கோடி வசூலித்தால் மட்டுமே இந்தப் படத்தை வாங்கியவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள். இதுவரை வெளிவந்த பிரபாஸ் படங்களில் அதிக விற்பனையான படம் இது என்பது கூடுதல் தகவல்.

தெலுங்கு திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ‘பாகுபலி 2’ படம் 1800 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது. ‘ஆர்ஆர்ஆர்’ படம் 1380 கோடியை வசூலித்துள்ளது. அதற்கடுத்து ‘சலார்’ படம் சுமார் 700 கோடி வரை வசூலித்தது என்றார்கள். இந்த ‘கல்கி 2898 ஏடி’ படம் மூலம் தன்னுடைய ‘பாகுபலி 2’ வசூலை பிரபாஸ் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறைந்தபட்சம் ‘சலார்’ வசூலையாவது அவர் முறியடிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -

Read more

Local News