Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிரேமலு பட நாயகனின் ‘ஐ அம் காதலன் ‘… அப்டேட்-ஐ வெளியிட்ட நடிகர் நஸ்லன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த பிப்ரவரி மாதம் 9-ந்தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் ‘பிரேமலு’. இந்த படத்தில் நஸ்லன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ‘தண்ணீர்மாதன் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’, ‘பிரேமலு’ ஆகிய பிளாக்பஸ்டர் படங்களுக்குப் பிறகு, தொடர்ந்து 4-வது முறையாக நஸ்லனுடன் இணைந்துள்ளார் கிரிஷ்.

இதற்கு முன் வெளியான ‘பிரேமலு’ படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 136 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மலையாள சினிமாவில் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து நஸ்லன் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றிய ‘ஐ அம் காதலன்’ என்ற படம் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கான அப்டேட்டை நஸ்லன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், படம் வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News