Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பாலா கிட்ட மட்டும் இத கேட்கவே மாட்டேன்… லாரன்ஸ் ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராகவா லாரன்ஸ் சிறந்த நடிகர், நடன கலைஞர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் அவர், ஊனமுற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.பல ஆதரவற்ற மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து, அவர்களின் கல்வி செலவுகளை கவனித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி முதியோருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். மக்களின் கண் முன் ‘உயிர் வாழும் தெய்வமாக’ நடமாடி வருகிறார்.ராகவா லாரன்ஸின் சமூக சேவையில் kpy பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா போன்றோர் இணைந்து உதவிகளை செய்து வருகின்றனர். KPY பாலா ஆதரவற்ற முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்து, மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார்.

ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாலா, பல நல்ல திட்டங்கள் செய்ய வேண்டும் என நினைப்பேன் ஆனால் போதிய பணம் இல்லாததால் செய்ய முடியவில்லை என கூறியார். இதனை கேட்டு லாரன்ஸ் உடனடியாக உதவினார். இருவரும் இணைந்து ‘மாற்றம்’ சேவையில் மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

இச்சமயத்தில் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில், நான் பாலாவிடம் மட்டும் கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்கவே மாட்டேன். பொதுவாக யாரிடம் பணம் கொடுத்தாலும் கணக்கு கேட்பேன் ஆனால் பாலாவிடம் கொடுக்கும் பணம் சரியான முறையில் ஏழை எளிய மக்களுக்கும் உதவி தேவைப்படுவோர்க்கு போய் சேரும் என்று எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News