சினிமா துறையிலிருந்து அரசியலுக்குள் சென்று எம்.எல்.ஏ ஆகி, தற்போது ஆந்திர மாநில துணை முதல்வராக பணியாற்றி வருபவர் பவன் கல்யாண். கடந்த வாரம் அவரது நடிப்பில் வெளிவந்த ‘ஹரிஹர வீரமல்லு’ திரைப்படம் தொடர்பாக பல்வேறு பேட்டிகளில் பங்கேற்றார். அந்த நேரத்தில், எந்த பாலிவுட் நடிகையுடன் இணைந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, பவன் கல்யாண் ‘கங்கனா ரணாவத்’ எனத் தெளிவாக கூறினார்.

அதேபோல், சினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்றவர் கங்கனா ரணாவத், தற்போது பாராளுமன்ற உறுப்பினராக (எம்.பி.) உள்ளார். ‘எமர்ஜென்சி’ என்ற திரைப்படத்தில் அவர் செய்த நடித்தை பாராட்டிய பவன் கல்யாண், அவரது நடிப்பை வியந்து, “வலிமையான பெண் கங்கனா ரணாவத்” எனக் கூறி பாராட்டு தெரிவித்தார்.
இந்த பாராட்டின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா, ‘வணக்கம்’ எமோஜிகளுடன் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது கங்கனா பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. ஆவார். பவன் கல்யாணும் பா.ஜ.க. கூட்டணிக்குள் உள்ளவர். இருவருமே நேரடியாகவும் உற்சாகமாகவும் பேசும் தன்மையுடையவர்கள் என்பதால், அவர்கள் இருவரும் ஒரு சேர ஒரு திரைப்படத்தில் நடித்தால், அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.