நடிகர் தனுஷ் நடிப்பில் ராயன் மற்றும் நிலவுக்கு என்னடி என்மீது கோபம் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகும் எனவும. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல நடிகர் தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் குபேரா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் தனுஷ் யாசகன் லுக்கில் தோன்றியிருந்தார். நேற்றைய தினம் குபேரா படத்தில் நடிக்கும் நாகார்ஜுனா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டு கட்டாக பணம் நாகர்ஜுனா பின் இருப்பதை காண முடிகிறது.மழையும் பெய்யும் சூழலில் குடை பிடித்தபடி நாகார்ஜுனா நடந்துவர, கீழே ஒரு நோட்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்சில் படமாக்கப்பட்டுள்ளது. கண்ணாடி போட்டுக்கொண்டு நாகார்ஜுனா மாஸாக காணப்படுகிறார். படத்தில் அவரது கேரக்டர் வில்லன் என்று கூறப்பட்டுள்ள நிலையில் சூழலில் பணக்கட்டுகளுடன் அவர் காணப்படுவது படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.
