Tuesday, November 19, 2024

‘நோ’ என்றால் ‘நோ’ தான்… பெண்களை மதியுங்கள்… குஷ்பு பளீச் பதில்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அதிகம் இருப்பதாக, நீதிபதி ஹேமா கமிஷன் அளித்த அறிக்கை தெரிவித்தது. இதனால், மலையாள சினிமா உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. பலர் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதனால், மலையாள சினிமா உலகம் பதட்டமடைந்துள்ளது. மேலும், அங்குள்ள நடிகர் சங்கம் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக இருந்த மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.

சினிமா துறையில் பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்திப்பது பற்றியதாக, நடிகை குஷ்பு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சினிமா மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இது நடக்கிறது. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்த பிரச்சனை உள்ளது. இவ்வளவு நாட்கள் ஏன் சொல்லவில்லை என கேட்காமல், அவர்கள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதே சமயம், அதை உடனே சொன்னால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பெண்களை ஆண்கள் மதியுங்கள். பெண்கள், வன்முறைக்கு எதிராக போராடும்போது, ஆண்களும் குரல் கொடுக்க வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரிடம் கூட ஆதரவு கிடைப்பதில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து தைரியமாக பேச வேண்டும். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்: ‛நோ’ என்றால் ‛நோ’ தான். உங்கள் கண்ணியம், மரியாதையை ஒருபோதும் விட்டுத்தராதீர்கள்,” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News