2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரன் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய அவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார். பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்தார்.

கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் படத்தில் ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியது. அதன் பின் ‘பரதா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.இதையடுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் காளமாடன் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதன்பின் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு லாக்டவுன் என பெயரிட்டுள்ளனர், இயக்குனர் ஏ.ஆர். ஜீவா இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ரகுனந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைக்க, சக்திவேல் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தின் டீசர் நாளை காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. படம் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.