Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நாளை திரைக்கு வரும் கருடன்… அதிரடி ஆக்சனில் சூரி வெளியான மேக்கிங் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கருடன்’ படம் நாளை மே 30ல் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, மைம் கோபி, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா செய்து, கதை எழுதியுள்ளார் வெற்றி மாறன். சில நாட்களுக்கு முன் வெளியான படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து, படக்குழுவினர் தற்போது படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேக்கிங் வீடியோவில் படப்பிடிப்பு பணிகள், சூரியின் ஆக்ஷன் பயிற்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதற்கான முன்னோட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘விடுதலை’ திரைப்படம் போல் சூரிக்கு அடுத்த வெற்றியைத் தரும் படமாக ‘கருடன்’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News