Tuesday, November 19, 2024

நான் நடிக்கவில்லை என்றாலும் ஜெயிலர் படம் இங்கு ஓடியிருக்கும்… மோகன்லால் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆண்டு வெளியானது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கினார். முன்னதாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ரஜினியின் ஜெயிலர் படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து ஜெயிலர் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய்களை வசூலித்தது என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது.படத்தின் வெற்றியை ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார், அனிருத் மற்றும் பல கலைஞர்களுடன் சேர்ந்து சன் பிக்சர்ஸ் கொண்டாடியது. அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பான் இந்தியா படமாக வெளியான ஜெயிலர் படத்தில் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் இணைந்திருந்தனர். மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கிலிருந்து சுனில் ஆகியோர் இந்த படத்தில் நடித்தனர்.ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்த மோகன்லாலிடம், மலையாளத்தில் ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டான நிலையில் மலையாள படங்களின் வசூல் பாதிக்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மோகன்லால், தானே நடிக்கவில்லை என்றாலும் ஜெயிலர் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.ரஜினிகாந்த் அனைத்து மொழிகளிலும் ஸ்டார் பவரை கொண்டவர் என்றும், மலையாளத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் என்றும் மோகன்லால் குறிப்பிட்டார். மலையாளத்தில் எம்புரான் போன்ற படங்களில் நடித்து வரும் மோகன்லால், தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது இணைந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் ஸ்டார் பவரை பற்றி மோகன்லால் பாராட்டியதால், ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News