Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நாக சைதன்யா கொடுத்த 250‌ கோடிக்கு ‘நோ’ சொன்னாரா சமந்தா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். தற்போது சினிமாவிலிருந்து சிறிய இடைவெளி எடுத்தவர் மீண்டும் சினிமாவில் நடித்துவருகிறார.ஹிந்தி படத்தில் சல்மான் கானுடன் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமந்தா ஜீவனாம்சம் குறித்து பேசிய பழைய பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா, தெலுங்கிலும் தனது நடிப்பைத் தொடங்கினார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்தபோது, இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். சில வருடங்களுக்கு பிறகு, இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தனது நடிப்பில் தீவிரமாக கவனம் செலுத்தினார்.

அவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளுக்கு கழித்து பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்தனர். திருமணத்திற்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் அவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால் காரணத்தை இருவரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா, அதன் பிறகு அதிக கவர்ச்சியுடனும் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்‌ சமந்தா. இந்தச் சூழலில், சமந்தா ஒரு பேட்டியில், நாக சைதன்யா அவருக்கு 250 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக கொடுக்க முன்வந்ததாகவும், அதனை சமந்தா மறுத்துவிட்டதாகவும் பரவிய தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சமந்தா, “250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் பற்றிய செய்தியை படித்து வருத்தப்பட்டேன். எப்போது வருமான வரித்துறையினர் வந்து கேட்டாலும் எதுவுமே இல்லை என்று அவர்களிடம் காட்டுவதற்கு ரெடியாக இருந்தேன்” என்றார். இந்த பழைய பேட்டிதான் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News