Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

நடிகர் சிரஞ்சீவியிடம் கறார் காட்டிய சரத்குமார்… ஏன் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

நடிகர் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமியின் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவர் மற்றும் அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. கடந்த வாரம் முதல் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து சரத்குமார் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர்.

போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான வரலட்சுமி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர், பாலா இயக்கத்தில் நடித்த தாரை தப்பட்டை திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு, வரலட்சுமி ஒரு கதாபாத்திரத்திற்கு பெரும் முயற்சி எடுப்பார் என்று அனைவருக்கும் புரியவைத்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, அவர் வில்லி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். படையப்பா படத்தை ரீமேக் செய்தால், அதில் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு இவர் சரியான தேர்வு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சரத்குமார் குடும்பத்தினர் திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல் ஹாசன், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ்களை வழங்கினர்.

இந்நிலையில், இன்று, ஜூன் 14ஆம் தேதி, தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை ஐதராபாத் படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்து, சரத்குமார் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழைக் கொடுத்து, மகளின் திருமணத்திற்கு வரவேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News