Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

தேவாவின் குரலில் ‘போட்’ படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகிறது… #BOAT

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிம்பு தேவன். அதன் பின்னர் பல வெற்றி படங்களை இயக்கியவர். 2021ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற திரைப்படத்தை இயக்கிய பின், யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் போட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இக்கதை இந்திய சுதந்திரம் வருவதற்கு முன்பே, 80 வருடங்களுக்கு முன்பு நடந்தது போல அமைந்துள்ளது. ஜப்பான் நாடு, மெட்ராஸ் ப்ரெசிடன்சி மீது குண்டு வீசிய போது, அங்கிருந்த 10 பேர் பே ஆஃப் பெங்கால் கடற்கரையில் உயிர் தப்பிப்பது போல் கதைக்களம் அமைந்துள்ளது. யோகி பாபு இப்படத்தில் போட் மேனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் முதல் பாடல் வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலான ‘தக்கிட தகிமி’ என்ற பாடல் தேவாவின் குரலில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News