விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலரும் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கோட்’ படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மூன்று பாடல்களும், டிரைலரும் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இசை வெளியீட்டு விழா நடக்குமா இல்லையா என்பது சில நாட்களில் தெரியும். இதற்கிடையில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் வீட்டிற்கு விஜய், படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சென்றனர். இது மரியாதை நிமித்தமாக நடந்த சந்திப்பு என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த்தை ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி நடிக்க வைத்துள்ளனர். இதற்காக அவரின் குடும்பத்தினரின் சம்மதத்திற்கு நன்றி தெரிவிக்கவே இந்த சந்திப்பு நடந்தது என தெரிகிறது. இந்த ரகசியம் படம் வெளியான பிறகே வெளிப்படுமா அல்லது தனி அறிவிப்பு வெளியாகுமா என்பது இன்னும் தெரியவில்லை.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000059626-1024x683.jpg)
படத்தில் மேலும் ஒரு ரகசியம் இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு பாடல் காட்சியில் த்ரிஷா நடித்துள்ளார் என்றும், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இணைந்து ஒரு அதிரடிப் பாடலுக்கு நடனமாடியிருப்பதாகவும் தகவல் உள்ளது. ‘கில்லி’ படத்தில் இடம்பெற்ற ‘அப்படிப் போடு’ பாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடலாக இது இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக வெளியாக வாய்ப்புள்ளது.