Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தி கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? தீயாய் பரவும் தகவல் ‌!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்துவருகிறார். கிட்டதட்ட படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்னும் சில வாரங்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. க்ளைமேக்ஸ் காட்சியில் கேமியோ ரோலில் 15 நிமிடங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும், அதில் விஜய்யும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் எந்தளவிற்கு இந்த தகவல் உண்மையானது என்று தெரியவில்லை.ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அதோபோல் சிவகார்த்திகேயன் அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதியதொரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியன.

இந்நிலையில் தி கோட் படத்தை பற்றி இப்படியொரு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் சென்னை வீரர்கள் சிலர் இப்படத்தில் சிறு கதாபாத்திரத்திங்களில் தோன்றுவதாக தகவல்கள் உலாவுகின்றன.இப்படி சர்ப்ரைஸ்களுக்கு மேல் சர்ப்ரைஸ்கள் வைத்திருக்கும் வெங்கட் பிரபுவின் கோட் படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News