Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தி கோட் படத்தின் டிரைலரைப் பார்த்து, நடிகர் அஜித் என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட்பிரபு சொன்ன சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்). ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தீ கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்கள் வெளியானவுடன் நல்ல வரவேற்பைப் பெற்றன. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் எபிக் தொழில்நுட்பத்தில் வெளியிடப்படுகிறது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது, இது ஒரு முழுமையான ஆக்ஷன் கமெர்ஷியல் படமாக அமைந்துள்ளது.

டிரைலர் வெளியீட்டு விழாவில், வெங்கட் பிரபு கூறியதாவது “தி கோட் படத்தின் டிரைலரைப் பார்த்து, நடிகர் அஜித் குமார், “டேய், சூப்பரா இருக்கு டா. என்னோட வாழ்த்துகளை விஜய் மற்றும் படக்குழுவினரிடம் தெரிவித்துவிடு” என்று கூறினார்” என தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News