வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் கோட். செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு அளித்த பேட்டியில், “கோட்” படத்தின் கதை பற்றி பேசுகையில், இந்த படத்தின் கதையை டிரெய்லரிலேயே சொல்லிவிட்டேன், ஆனால் யாரும் அதை கவனிக்கவில்லை. மேலும், இந்த படத்தின் காட்சிகள் அடுத்தடுத்தது என்ன நிகழப்போகிறது என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும். இது போன்ற ஒரு திரைக்கதை அமைத்துள்ளேன், என்று கூறினார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064833-1-1024x537.jpg)
அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அவர் துரோகத்தின் கதையை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த “கோட்” படம் காந்தி என்ற நபரின் வாழ்க்கையில் நடந்த ஒரு குடும்பக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. “மங்காத்தா” படத்தை விட “கோட்” படம் சிறப்பாக இருக்கும் என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000065429-1024x768.jpg)
தற்போது, தி கோட் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகி உள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில், வெங்கட் பிரபு “கடைசி சவுண்ட் மிக்ஸிங் முடிந்தது. உதயகுமார் மற்றும் அவரது குழுவுக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார். மேலும், தனது உதவி இயக்குநர்களான வீர் ராமகிருஷ்ணன் மற்றும் பிரேம்ஜி, தயாரிப்பாளர்களான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்திக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.