Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர்-ஐ‌ மறவாமல் தனது திருமண அழைப்பிதழை வழங்கிய வரலட்சுமி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை வரலட்சுமி சரத்குமார் தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை ஜூலை மாதத்தில் திருமணம் செய்யவிருக்கிறார். திருமணத்தை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை குடும்பத்துடன் சென்று கொடுத்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில், தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் சிம்புவுக்கு ஜோடியாக வரலட்சுமி அறிமுகமானார். அதேபோல, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா மற்றும் ராதிகா இணைந்து நடித்திருந்தனர். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு திருமண அழைப்பிதழை வழங்க ராதிகாவுடன் வரலட்சுமி சரத்குமார் சென்றார். அங்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராதிகா மற்றும் வரலட்சுமி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மேலும், பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் திருமணத்திற்கு வருவார்கள் என்று தெரிகிறது. வரலட்சுமி சரத்குமார் தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நிலையில், டோட்டல் சவுத்தே திருமண விழாவில் பங்கேற்கும் என்றும் பிரம்மாண்ட திருமணமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News