Tuesday, November 19, 2024

தனுஷ் நடிப்பில் மிரட்டிடார்… ஏ.ஆர்.ரகுமான் தரமான சம்பவம்… ராயனை போற்றும் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் இன்று (ஜூலை 26) திரையில் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் பின்னணியில் உருவான இப்படம் ஏ சான்றிதழுடன் திரைக்கு வருவதால், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. சமீபத்தில், டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முக்கியமாக, வாட்டர் பாக்கெட், அடங்காத அசுரன் பாடல்கள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன.

படக்குழு ராயன் திரைப்படம் பார்க்க சென்னை ரோஹிணி தியேட்டரில் வந்தனர். படம் பார்த்த ரசிகர்கள் விடியோக்களை எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் படம் சிறப்பாக இருக்கிறதென்றும், தனுஷ் நடிப்பின் அசுரன் என்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பின் அரக்கன் எனவும், ஏ.ஆர்‌.ரகுமான் இப்படத்தில் செய்தது தரமான சம்பவம் என்றும புகழ்ந்து வருகிறார்கள்.

மேலும் ரகுமான் பின்னணி இசையில் கலக்கியிருப்பதாக பலரும் தங்களது கருத்தினை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். தற்போது வரை நல்ல விமர்சனங்களையே ராயன் திரைப்படம் பெற்று வருகிறது.

- Advertisement -

Read more

Local News