Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தனி மனித உணர்வுகளை காயப்படுத்தாதீங்க… ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட மற்றொரு அறிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ், சினிமா பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார்.இந்த விவாகரத்தைக் குறித்து காரணங்களை ஆராய்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்ட நிலையில், இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது யாரோ ஒரு தனி நபரின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததால் பின்னணியையும் காரணங்களையும் நெருங்கி பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

அனைவரிடமும் கலந்த ஆலோசித்து பின்பு தான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமைகளோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்பிற்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.” என ஜி.வி. பிரகாஷ் தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News