மோகன் ராஜா தனிஒருவன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் உருவான விதத்தைப் பற்றி ஒரு பேட்டியில் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, ஒரு வலிமையான வில்லனை உருவாக்கினால் மட்டுமே ஹீரோவுக்கு உரிய மரியாதை கிடைக்கும்.தனி ஒருவன் படத்தின் ரகசியம் கதைக்கான வில்லனின் தேர்வு ஹீரோவின் பொறுப்பாக இருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இதற்காக நான் பல திரைப்படங்களை முன்மாதிரியாகக் கொண்டு ஆய்வு செய்தேன்.அதில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படமும் அடங்கும். அந்த படத்தின் இறுதி காட்சியில் பரவை முனியம்மா மெயின் வில்லனாக இருப்பார். அவர் சிவாவை பெரிய ஹீரோவாக்க நானே வில்லனாகி விட்டேன் என்று சொல்வார். இதுவும் எனக்கான ஒரு முக்கியமான பாடமாக இருந்தது.

இவ்வாறு பல விஷயங்களை ஆராய்ந்து சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கினேன் என்று மோகன் ராஜா குறிப்பிட்டுள்ளார். இதனால் தனி ஒருவன் படத்துக்காக அவர் எவ்வளவு கடினமாக உழைத்தார் என்பதும் தெளிவாகிறது.தனி ஒருவன் 2 படத்தின் அறிவிப்பு வந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பு சிறிது தாமதமாகும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் ஹீரோவுக்கு பொருத்தமான வில்லனை தேர்வு செய்வதுதான்.இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி, பகத் பாசில், துல்கர் சல்மான், பிரசாந்த் போன்ற நடிகர்கள் பொருந்தக்கூடும் என்று ரசிகர்களும் பரிந்துரை செய்து வருகின்றனர். ஆனால் இயக்குனரின் தீர்மானம் என்ன என்பது காலம் போகத்தான் தெரியும்.
