இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தனது வாழ்க்கை மற்றும் வேலைகளை குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் , சில நேரங்களில் நாம் நிறைய திட்டமிடுகிறோம். ஆனால் அது நடக்காமல் போகும். நான் தண்ணீரைப் போல காலத்தின் ஓட்டத்தில் பயணிக்கிறேன். என் வேலையிலும் இப்படியே தான். இதற்கு முன் நான் ஒரு வெறி பிடித்தவன் போல, இரவும் பகலும் வேலை செய்தேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்.
இப்போது நான் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் பணி சுமையை குறைத்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.