சினிமா உலகில் காதல், திருமணம், விவாகரத்து ஆகியவை மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டன. இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் பல வருடங்களாக காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர்களுக்கு கருத்து வேறுபாடுகள் உருவாகி, இருவரும் பிரிந்துவிட்டனர். சமந்தா இதுவரை திருமணம் செய்யாமல் தனித்துவழியில் இருந்து வருகிறார், ஆனால் நாக சைதன்யா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த சோபிதா துலிபலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாக சைதன்யாவுடன் திருமண நிச்சயத்தின் போது சமந்தா அணிந்திருந்த மோதிரத்தை அவர் செயினில் தொங்கும் டாலராக மாற்றிக் கொண்டிருப்பது சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜுவல்லரி டிசைனர் துருமித் மெருலியா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமந்தா பல்வேறு நிகழ்ச்சிகளில் அந்த டாலரை அணிந்து கலந்துகொண்டுள்ளார். வைரத்தால் வடிவமைக்கப்பட்ட அந்த டாலர் பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது. விவாகரத்து பெற்ற பலரும் தங்கள் திருமண மோதிரத்தை வேறுவிதமான வடிவங்களில் மாற்றி அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளதாகவும் அந்த டிசைனர் குறிப்பிட்டுள்ளார்.