Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

‘தங்கலான்’ திரைபடத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சமீபத்தில் வெளியானது. அதற்கு முன்னதாக வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக சியான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் 2 வாரங்களிலேயே ஓடிடியில் வெளியாகிவிட்டது. இந்தியன் 2 திரைப்படம் ஒரு மாத இடைவெளியில் வெளியான நிலையில், தங்கலான் திரைப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நெட்பிளிக்ஸில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News