Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

தக் லைஃப் படத்தின் கதையை மாற்றினாரா மணிரத்னம்? வெளியான சுவாரஸ்யமான தகவல்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு கமல் மற மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ஆரம்பத்தில் துல்கர் சல்மான் கான் மற்றும் ஜெயம் ரவி இந்த படத்தில் இணைந்திருந்தனர், ஆனால் கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் விலகியதாக தெரிகிறது.

அவர்களுக்கு பதிலாக, சிம்பு மற்றும் அசோக் செல்வன் தற்போது படத்தில் இணைந்துள்ளனர். துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவியின் இடத்தை இவர்கள் ஏற்கவில்லை, மேலும் படத்தின் கதைக்களம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, ஐதராபாத், டெல்லி போன்ற இடங்களில் படத்தின் 50 சதவிகித ஷூட்டிங் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகிய பிறகு, அவர்களின் கதாபாத்திரங்களையும் மனிரத்னம் முற்றிலுமாக நீக்கி, படத்தின் ஸ்கிரிப்ட்டையே மாறி விட்டதாகவும் செய்திகள் வருகின்றன. கமல்ஹாசன் மற்றும் சிம்பு முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். அவர்களுடைய கதாபாத்திரங்கள் மிகவும் வலுவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் பிரமோவில் காணப்பட்டபடி, இது பீரியட் படம் அல்ல என்றும், அந்த பிரமோவிற்கும் படத்திற்கும் தொடர்பில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News