குக் வித் கோமாளியில் முக்கிய பிரபலமாக இருந்த குரேஷியையும் வந்துவிடும்படி வெங்கடேஷ் பட் மற்றும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் அழைத்தார்களாம்.விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு இருக்கும் டாப் குக் டூப் குக் ஷோவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.குக் வித் கோமாளி நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தான் இந்த ஷோவை நடத்தி வருகிறார். ஆனால் தனக்கு ஆரம்பகாலத்தில் இருந்தே ஆதரவாக இருந்து வரும் விஜய் டிவியை விட்டு எப்படி வருவதென என மறுத்தாராம்.

