Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

ஜோராக நடந்த அர்ஜுன் -‌ தம்பி ராமைய்யா வீட்டு திருமணம்… ஐஸ்வர்யாவை கரம் பிடித்த உமாபதி ராமைய்யா !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS ?

நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் மற்றும் நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகள் நடைபெற்றன. இன்று (ஜூன் 9) காலை, சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் கோலாகலமாக நடந்தது. 

இதில் இருவீட்டாரத்தின் நெருங்கிய குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நடிகர்கள் விஷால் மற்றும் செந்தில் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.திருமண வரவேற்பு ஜூன் 14ல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

- Advertisement -

Read more

Local News