மலையாளத் தொலைக்காட்சியில் 2024-ஆம் ஆண்டு வெளியான ‘மனோரதங்கள்’ என்ற தொடரில் கடைசியாக நடித்திருந்த நடிகர் நரேன், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அவர் நடித்துள்ள சில திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.

இந்த வரிசையில், எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ஜன நாயகன்’ திரைப்படமும் ஒன்று. சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் நரேன், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறித்து பகிர்ந்துள்ளார்.அதாவது, நான் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் ஒரு விஞ்ஞானியாக நடித்துள்ளேன். இது ஒரு கெஸ்ட் ரோல் என்றாலும், படத்தில் அது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாத்திரம். அந்த காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது,” என கூறியுள்ளார்.
‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வருகிற ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.