Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

செய்தியாளர்களை பார்த்து டென்ஷன் ஆகி கத்திய நடிகர் விஜய்யின் தாய்… என்ன நடந்தது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சில மாதங்களுக்கு முன்பு ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பிறகு, சினிமாவிலிருந்து முழுமையாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதைய ‘கோட்’ படத்தை முடித்த பிறகு, ‘தளபதி 69’ படத்தை முடித்து, முழுமையாக அரசியலில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது அரசியல் கட்சி அறிவிப்பிற்குப் பிறகு, முதன்முறையாக தன்னுடைய பெற்றோரை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், விஜய்யின் பெற்றோர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது, பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அவர்களை பின்தொடர்ந்ததால், கடுப்பான விஜய்யின் தாய்‌ ஷோபா, “நீங்க வரக்கூடாது… வரக்கூடாது” என்று கோபமாக கூறினார். இதனால், அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகரைச் சூழ்ந்த பத்திரிகையாளர்கள், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர், “என் மகன் கட்சி ஆரம்பித்ததற்கு எனது வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் எப்போதும் இருக்கும். கட்சியில் தலையீடு செய்யவில்லை என்ற செய்தியாளர் கேள்விக்கு ‘எப்போதும் இருக்கும்’ என பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News