சூரியை வெற்றிமாறன் ‘விடுதலை’ படத்தின் மூலம் ஒரு முக்கிய கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான இப்படத்தில் சூரியின் திறமையான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் வெறும் காமெடி நடிகர் மட்டுமின்றி, ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்ததை ரசிகர்கள் பாராட்டினர். விடுதலை படத்தில் சூரியின் துணிச்சலான நடிப்பு அவருக்கு ஒரு புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது.
தற்போது சூரி நடிப்பில் கருடன் படம் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், சூரி அளித்த ஒரு பேட்டி சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில், இளையராஜா சார் புது ஸ்டூடியோ தொடங்கிய அன்றே விடுதலை படத்துக்கான பூஜை அவரது அலுவலகத்தில்தான் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு ட்யூன் போட்டார்.
அப்போது 45 வருட அனுபவத்தில் நான் இதுவரை எந்த ஹீரோவையும் அருகே உட்கார வைத்துக்கொண்டு ட்யூன் போட்டது இல்லை. உனக்கு மட்டும்தான் இது நடந்திருக்கிறது. என்ன ஹீரோ சார் ஆரம்பிக்கலாமா என கேட்டார். நெகிழ்ச்சியில் நான் கண்கலங்கி விட்டேன் அந்த பாடல் தான் விடுதலை படத்தில் இடம்பெற்ற வழி நெடுக காட்டு மல்லி பாடல் என கூறியுள்ளார்.