பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா தனுஷ் மற்றும் ராஷ்மிகாவை வைத்து குபேரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.நாகர்ஜுன் அக்கேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க மற்றொரு ஹீரோயினியும் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அதன்படி, சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமா மூலம் அறிமுகமானார்.இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.சிவகார்த்திகேயன் தான் பிரியங்கா மோகனின் மேனேஜர் போல் இருந்து அவரின் கால்ஷீட் போன்றவை பார்த்துக்கொண்டு இருந்தாராம். இப்போது அவரிடமிருந்து தனுஷ் பக்கம் சென்றுள்ளார் பிரியங்கா மோகன்.

அதாவது முன்னரே தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா மோகன்.தற்போது தனுஷின் குபேரா படத்திலும் நடிக்க உள்ள நிலையில் இப்படத்திற்கான ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

இதுமட்டுமின்றி பிரியங்கா மோகன் தனுஷ் நடிக்கும் மேலும் சில படங்களிலும் நடிக்கவுள்ளாராம். இவர்கள் இருவரின் காம்போவில் மேலும் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம் பிரியங்கா மோகன் நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.