சினிமாவில் ஹீரோக்களுக்கு அதிக சம்பளமும், ஹீரோயின்களுக்கு குறைவான சம்பளமும் கொடுப்பதாக நடிகைகள் தரப்பில் இருந்து பலகாலமாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
இந்நிலையில் நடிகர்களுக்கு வழங்குவது போல் நடிகைகளை முண்ணனி கதாபாத்திரத்தில் வைத்து முக்கியத்துவம் அளித்து வெற்றி பெரும் படங்கள் அதிகரித்து வருவதால் நடிகைகளுக்கும், நடிகர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இச்சமயத்தில் தமிழில் ‘இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 4’ போன்ற படங்களில் நடித்துள்ள ராஷிகன்னாவும் சம்பள பாகுபாடு தவறு என பேசியுள்ளார். சினிமாவில் சம்பள விஷயத்தில் நிறைய பாகுபாடுகள் இருக்கின்றன. காலம் மாறும்போது அதிலும் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றுள்ளார் .
மேலும் நடிகை ராஷிகன்னா, பேய் படங்களில் நடிப்பது சுலபம் தான் ஆனால் அதை இயக்குவது கஷ்டம். நான் தமிழில் ஏற்கனவே நடித்த ‘திருச்சிற்றம்பலம், சர்தார்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. இப்போது ‘அரண்மனை 4’ படமும் வெற்றியை பெற்றுள்ளது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு இந்தி மொழியும் பேச தெரியும். இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளையும் புரிந்து கொண்டு பேச இயல்கிறது என்று தெரிவித்துள்ளார்.