Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிங்கம் போல் வீறு நடைப்போட்ட வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக அபுதாபியில் ஓய்வெடுக்க தங்கியிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்தவர்களுக்காக நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அதேபோல் அபுதாபியில் திறந்துவைக்கப்பட்ட புதிய பாப்ஸ் இந்து மந்தீர்ல் ரஜினிகாந்த் தரிசனம் செய்தார். தற்போது, டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக, வருகின்ற ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பிய விமான நிலைய வீடியோ வெளியாகி வைரலானது.ரஜினிகாந்த் இந்த வயதிலும் சிங்கம் போல நடந்து வருவதாக ரசிகர்கள் ரஜினிகாந்தை கொண்டாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவர் தன்னை பார்த்து உற்சாகம் அடைந்த ரசிகர்களையும் கையசைத்ததையும் அங்கு பார்க்க முடிந்தது. இளம் நடிகர்களுக்கு எந்த வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்க உத்வேகமாக ரஜினி செயல்பட்டு வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News