Monday, September 30, 2024

சாய் தன்ஷிகாவா இது… இவ்வளவு ஃபிட்னஸா மாறிட்டங்களே… ட்ரெண்ட் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தன்ஷிகா “பேராண்மை” படத்தின் மூலம் கவனம் பெற்றவர். அதன் பின்னர், “மாஞ்சா வேலு”, “அரவாண்”, “பரதேசி” போன்ற பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில், அவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியபோது, “கபாலி” படத்தில் ரஜினியின் மகளாக நடித்து மீண்டும் புகழடைந்தார். இருப்பினும், அதன்பின்னரும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. 2018ல் “காத்தாடி” மற்றும் “காலகூத்து” ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். கடைசியாக 2021ல் “லாபம்” படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு, தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி சில படங்களில் நடித்தார். சாய் பாபா பக்தையான அவர், தன் பெயருக்கு முன் “சாய்” என்று சேர்த்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது சாய் தன்ஷிகா தகஷனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைப்பெற்றது.இப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகிறது. அந்நிகழ்ச்சியில் மார்டன் உடையில் கலந்துகொண்டார் சாய் தன்ஷிகா. சில காலத்திற்கு, கடுமையான உடற்பயிற்சியினால் உடல் எடையை கணிசமாக குறைத்தார். இப்போது, உடல் எடையை சற்று கூட்டி, புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளார்.

இதனை முன்னிட்டு, அவர் நடத்திய போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய மானேஜரை நியமித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News