கொடைக்கானலில் உள்ள வெள்ளக்கெவி கிராமத்தை மையமாகக் கொண்டு ‘கெவி’ என்ற படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குநர் அமீர் பேசினார். அவர் வாழை படத்தோடு ‘கொட்டுக்காளி’ படத்தை வெளியிட்டது பெரிய வன்முறை என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், விருது விழாக்களில் அனுப்பப்பட வேண்டிய படத்தை, கமர்ஷியலாக திரையரங்குகளில் வெளியிட்டது தவறாகும். கொட்டுக்காளி திரைப்படம் கொண்டாடப்பட வேண்டியது. இதனால், படத்தின் இயக்குநரை பலர் மிரட்டும் சூழல் உருவாகி விட்டது. நான் இருந்தால், இதுபோன்ற படத்தை ஓடிடியில் வெளியிடுவேன். நல்ல படைப்பாளிகளின் பெயரை பப்ளிக் விமர்சனத்தில் இழிவுபடுத்தக் கூடாது என்றுள்ளார்.