Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

கொடிவீரன் பட நடிகையா இது? பட்டம் வென்று அசத்திய சனுஷா சந்தோஷ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் “ரேணிகுண்டா”, “எத்தன்”, “அலெக்ஸ் பாண்டியன்”, “கொடிவீரன்” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சனுஷா சந்தோஷ். குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கிய இவருக்கு சில படங்களில் கதாநாயகியாகவும் பல படங்களில் தங்கை கதாபாத்திரங்களுமே கிடைத்து வந்தன.சற்றே உடல் எடை கூடியும் காணப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

தமிழில் 2017ல் வெளியான “கொடிவீரன்” படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு 2019-ல் தெலுங்கில் வெளியான “ஜெர்சி” படத்தில் நடித்தவர், பின்னர் நடிப்பை தற்காலிகமாக ஒதுக்கி விட்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.இதனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் யுனிவர்சிட்டியில் “குளோபல் மெண்டல் ஹெல்த் அண்ட் சொசைட்டி” மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் படிப்பை இரண்டு வருடமாக படித்து வந்தார். தற்போது படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டமும் பெற்று விட்டார் சனுஷா சந்தோஷ்.

இது குறித்த புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ள அவர், “கடந்த இரண்டு வருடங்களாக வீட்டை மிஸ் பண்ணியது, அழுதது, தூக்கம் இல்லா இரவுகள், நிறைய பார்ட் டைம் புல் டைம் வேலைகள், கடினமான பணிகள் மற்றும் உடல் நலக்குறைவு, மன அழுத்தம் என அனைத்தையும் கடந்து, இந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை இப்போது பெற்றுள்ளேன்” என்று உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News