Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கே.பாலசந்தர்க்கு முழு உருவ சிலை வைக்க வேண்டும்… கண்கலங்கி பேசிய பாரதிராஜா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் கே. பாலச்சந்தரின் 94வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்து கொண்டு பாலச்சந்தரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

இவ்விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி, இயக்குனர்கள் வஸந்த், சரண், மங்கை அரிராஜன், நடிகர்கள் பூ விலங்கு மோகன், தாசரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, ஆழ்வார்பேட்டை போக்குவரத்து சதுக்கத்துக்கு பாலச்சந்தரின் பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு நன்றி. அந்த சதுக்கத்தில் அவரது முழு உருவ சிலையை வைக்க வேண்டும் என்றார்.மேலும் அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டபோது கண்கலங்கினார்.இதைத்தொடர்ந்து இளையராஜா பயோபிக் போல் பாலசந்தர் அவர்களின் பயோபிக் எடுக்கப்படும் என்றார்.

- Advertisement -

Read more

Local News