கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகரான உன்னி கண்ணன் என்பவர் சென்னை வந்து பலமுறை விஜய்யை சந்திக்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. அதற்காக தனது முயற்சியை நிறுத்தாமல் வித்தியாசமான முறையில் யோசித்து விஜய் சந்திக்க முடிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று சென்னை வந்து விஜய் சந்திப்பதற்காக கேரளாவில் மங்கலம் பகுதியில் இருந்து நடை பயணம் மேற்கொண்டார் உன்னி கண்ணன்.கழுத்தில் விஜய் படத்தை கட்டி தொங்க விட்டபடி கைகளிலும் விஜயின் பெரிய புகைப்படங்களை பிடித்தபடி அவர் நடைப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகின. எப்படியும் இது விஜய்யின் கவனத்திற்கு சென்று விடும், அவரை இந்த முறை சந்தித்து விடலாம் என்பது தான் உன்னி கண்ணனின் நம்பிக்கையாக இருந்தது. அதற்கேற்றபடி சென்னை வந்து விஜய்யையும் சந்தித்து விட்டார்
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more