Friday, January 17, 2025

கேம் சேஞ்ஜர் ரிசல்ட் சொல்ல வருவது என்ன? பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா கேம் சேஞ்ஜர்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பான் இந்தியா படமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தேவையற்ற பிரம்மாண்டங்கள் சேர்க்கப்பட்டால், அதை ரசிகர்கள் புறக்கணிக்கும் நிலை உருவாகியுள்ளது என்று சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக, கேம் சேஞ்ஜர் படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படம் இப்போது மிகவும் சறுக்கும் நிலையில் உள்ளது. “பிரம்மாண்டத்திற்கான ‘கேம் ஓவர்'” என டோலிவுட் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

தயாரிப்பு நிறுவனம் முதல் நாளிலேயே 186 கோடி வசூல் என்று அறிவித்தாலும், ஒரு வாரத்தில் மிகப்பெரிய வசூலை கடக்கவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெங்கடேஷ் நடித்த சங்கராந்திகி வஸ்தனம் படம் மூன்று நாட்களில் 100 கோடி வசூலை கடந்து தெலுங்கில் சங்கராந்தி வின்னர் ஆக முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடித்த டாகு மகாராஜ் படமும் நான்கு நாட்களில் 100 கோடி வசூலை கடந்து வெற்றி பெற்றுள்ளது.ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பிறகு தனிப்பட்ட பெரிய வெற்றியை கேம் சேஞ்ஜர் மூலம் பெறலாம் என எதிர்பார்த்த ராம் சரண், இந்த சங்கராந்தி முன்னேற்றம் காணாமல் போனது.

- Advertisement -

Read more

Local News