Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய‌ ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த வீடியோவைப் பார்த்து யாரடி நீ மோகினி பட பிரபலம்நடிகர் கார்த்திக் குமார் கலாய்த்தது போல ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதற்கு ரியாக்ஷன் அளிக்கும் விதமாக எமோஜி ஒன்றை பதிவிட்டார் வெங்கட் பிரபு. இதனால், கார்த்திக் குமார் ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோவை கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபு என் சர்ச்சை எழுந்தது. ஆனால், வெங்கட் பிரபு உடனடியாக பதிலளித்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

நெட்டிசன்கள் சிலர், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவை பார்த்து விட்டு சோசியல் மீடியாவில் கார்த்திக் குமார் கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபுவைக் குற்றம்சாட்டி கொளுத்தி போட்டனர்.

பதிலளித்த வெங்கட் பிரபு தனது விளக்கத்தில், இல்லவே இல்லை…கலாய்த்தாக தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும், இது எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவான கருத்து. ஒரே பாணியில் கமர்சியல் படங்களை எடுப்பதை அவரும் கலாய்த்திருந்தார். வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்சியல் படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? என்ற கேள்வியை வெங்கட் பிரபு எழுப்பினார்.

- Advertisement -

Read more

Local News