Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் நடிகர் சத்யராஜ்! #Coolie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் கூலி படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கும் அறிமுக போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமாகும். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்றார், மேலும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இதற்கு முன்னர், மலையாள நடிகர் சௌபின் சாகிர், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்த சூழலில், கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அவர் இப்படத்தில் ராஜசேகர் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

- Advertisement -

Read more

Local News